Home /News /tamil-nadu /

ரஜினியின் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்

ரஜினியின் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்

ரஜினிகாந்த் - மு.க.ஸ்டாலின்

ரஜினிகாந்த் - மு.க.ஸ்டாலின்

மருத்துவர்கள் மற்றும் ரஜினிகாந்தின் உறவினர்களை நேரில் சந்தித்து கடந்த மூன்று நாட்களாக அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார்.

    நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .ரஜினிகாந்த்துக்கு கழுத்து பகுதி ரத்தநாளத்தில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை குறிப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது அவருடைய உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறிவதற்காக காவிரி மருத்துவமனைக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்றார். அங்கு உள்ள  மருத்துவர்கள் மற்றும் ரஜினிகாந்தின் உறவினர்களை நேரில் சந்தித்து கடந்த மூன்று நாட்களாக அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் தற்போது அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டார்.

    மேலும் கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் அதற்கு அரசு உதவ தயாராக இருப்பதாக உறவினர்களிடம் முதல்வர் நம்பிக்கை தெரிவித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.முதலமைச்சரின் வருகையை ஒட்டி மருத்துவமனையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய ஏற்கனவே முதலமைச்சர் ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: DMK, Health, Hospital, MKStalin, Rajinikanth

    அடுத்த செய்தி