முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்.. ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்.. ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

MK Stalin : முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், தாம் நலம்பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

  • Last Updated :

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்புகிறார். ஒரு வாரத்திற்கு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்புகிறார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். சென்னை காவேரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற நிலையில் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். காவேரி மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காலை 9:45 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், 14ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், தாம் நலம்பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் ஒருவாரம் வீட்டில் இருந்து பணிகளை கவனிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருக்க சம்மதித்தாலும், ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை. முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடியே இருப்பேன். ஜூலை 18- தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மகத்தான நாளுக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில் வீட்டில் இருந்தபடியே காணொலியில் உரையாற்றிட இருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: CM MK Stalin, Covid-19, DMK, MK Stalin, Tamil Nadu, Tamil News