மேகதாது அணை விவகாரம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், மேகதாது அணை திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

 • Share this:
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்கிறார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.

  தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இன்றிரவு தங்கும் முதலமைச்சர் நாளை மதியம் 12.15 மணியளவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

  எனினும், மேகதாது அணை விவகாரம், பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலை விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் குடியரசு தலைவருடனான முதல் சந்திப்பு இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 7ம் தேதி கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு நாளில் அவரது படத்திறப்பு விழா சென்னையில் நடக்கிறது.

  ALSO READ |  பெண்களுக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து வடமாநிலத்தவர்களிடம் கட்டணம் வசூல்: அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்!

  இதில் பங்கேற்று கருணாநிதியின் படத்தை திறந்து வைக்க சென்னை வருமாறு குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், மேகதாது அணை திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: