ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல்.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல்.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு

கூட்ட நெரிசலைத் தவிர்க்க நாள்தோறும், ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் தலா 200 பேருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி தொடங்கி வைக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காக ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டிருந்தது. மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க நாள்தோறும், ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் தலா 200 பேருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 33,000 நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்யப்படுகிறது. இதுவரை 93 சதவீதம் பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து, பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று, சென்னையில் போர் நினைவுச் சின்னம் அருகே அன்னை சத்யா நகரில் தொடங்கி வைக்கவுள்ளார்.

அதேசமயம் சமயத்தில் பல்வேறு காரணங்களுக்காக டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்கள் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டை கொண்டு வந்து பொங்கல் தொகுப்பினை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கனை பெற்று கொண்ட அதற்கான நாளில் வந்து பெற்று கொள்ளலாம். இதில் ஏதும் முறைகேடுகள் நடந்தால் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CM MK Stalin, Pongal 2023, Pongal festival, Pongal Gift