'திமுகவிற்கு கொடுத்து பழக்கம் இல்லை, எடுத்துதான் பழக்கம்' - முதலமைச்சர் காட்டம்

'திமுகவிற்கு கொடுத்து பழக்கம் இல்லை, எடுத்துதான் பழக்கம்' - முதலமைச்சர் காட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சிறுபான்மையினர் எதிர்கொண்டுவரும் பிரச்னைகளைத் தீர்க்காமல், ஆட்சியை பிடிப்பதற்காக திமுக அவதூறு பரப்பி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக அரசு சட்டம் பிறழாமல் ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து குமாரபாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினார். அதிமுக ஆட்சியில் கடந்த ஓராண்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4000 ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

  திமுகவினர் பெண்களை இழிவுபடுத்தி தரக்குறைவாக பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும், பெண்கள் பாதுகாப்பாக இருக்க அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் வாயிலாக காவிரி நீர் மாசுபடாமல் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

  முன்னதாக ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம் செய்தார். அப்போது, வரும் தேர்தலில் எதிரியை வீழ்த்தி அதிமுக ஆட்சி தொடர மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

  கோவை மாவட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கொடிசியா மைதானத்தில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், கோவை மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுவதை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் கூறினார். சிறுபான்மையினர் பிரச்னைகளை தீர்க்க திமுக முன்வருவதில்லை என்றும் பகிரங்கமாக சாடினார்.

  ALSO READ | 'வானதி சீனிவாசன் நமது எண்ணங்களை பிரதமரிடம் கொண்டு செல்லும் தூதுவராக இருப்பார்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

  நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளார் பொன். ஜெயசீலனுக்கு ஆதரவாக காலையில் வாக்கு சேகரித்த முதலமைச்சர், தொடர்ந்து குன்னூரில் அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஹெலிகாப்டரில் பறந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
  Published by:Sankaravadivoo G
  First published: