ஆகம விதிகளின்படியே அனைத்தும் நடைபெறும்: அத்திவரதரை தரிசித்த முதல்வர் விளக்கம்!

ஆகம விதிகளின்படியே அனைத்தும் நடைபெறும்: அத்திவரதரை தரிசித்த முதல்வர் விளக்கம்!
  • News18
  • Last Updated: July 24, 2019, 11:21 AM IST
  • Share this:
அத்திவரதரை குளத்திற்குள் கொண்டு செல்லாமல், கோவிலிலேயே வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், ஆகம விதிகளின் படியே அனைத்தும் நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்துக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு வீற்றிருக்கும் அத்திவரதரை தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியர்கள்  மரியாதை அளித்து வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, கோயிலில் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார்.


அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இதில், தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி, இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,  பக்தர்களுக்காக மருத்துவ வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.  அத்திவரதரை குளத்திற்குள் கொண்டு செல்லாமல், கோவிலிலேயே வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பதிலளித்த அவர், ஆகம விதிகளின் படியே அனைத்தும் நடைபெறும் என விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற ஒரு நிகழ்வை தாமே இதுதான் முதல்முறை பார்ப்பதாகவும், இறைவன் கருணையால், அடுத்த 40 ஆண்டுகள் இருந்தால், இதை விட சிறப்பான ஏற்பாடுகள் அத்திவரதர் உற்சவத்துக்கு செய்யப்படும் எனவும் நகைச்சுவையாக தெரிவித்தார்.இதனிடையே, அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின்  பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி,  சென்னை உயர் நீதிமன்றத்தில், ராதாகிருஷ்ணன் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... அத்திவரதரை எவ்வாறு தரிசிக்க வேண்டும்?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading