சென்னை கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் முதல்வர்!

73rd Independence Day 2019 | தமிழக முதலவர் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து உரையாற்றி வருகிறார்.

Web Desk | news18
Updated: August 15, 2019, 9:16 AM IST
சென்னை கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் முதல்வர்!
தேசியக் கொடியேற்றினார் முதல்வர்
Web Desk | news18
Updated: August 15, 2019, 9:16 AM IST
நாட்டின் 73-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார்.

இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதேபோல சென்னையிலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை சென்னை கோட்டை கொத்தளத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து துறையின் காவல் வீரர்கள் புடை சூழ வருகை தந்தார். அவரை தமிழக தலைமை செயலாளர்  சண்முகம் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, முப்படை மற்றும் காவல் துறையின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் முப்படை வீரர்களின் அணிவகுப்பையும் காவல்துறையின் அணிவகுப்பையும் தனி வாகனத்தில் ஏறி பார்வையிட்டடார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து உரையாற்றி வருகிறார்.
First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...