தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு

தமிழகத்தில் ஆறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வேறு துறைகளுக்கு மாற்றி தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளராக இருந்த எஸ்.கே. பிரபாகர் நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், சமூக நலத்துறையின் முதன்மை செயலாளர் மணிவாசன், பொதுப்பணித்துறை செயலாளராக  மாற்றப்பட்டுள்ளார்.

உணவு பொருள் வழங்கல் ஆணையராக செயல்பட்டு வந்த மதுமதி சமூக நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை  இயக்குநராக இருந்த ஆர்.கண்ணன், உணவுப் பொருள் வழங்கல்  இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

அருங்காட்சியகத்துறை இயக்குநர் கவிதா ராமு ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறை சிறப்பு செயலாளராக இருந்த ஆபிரகாம், சமூக நலத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க... நின்ற கோலத்தில் அத்திவரதர்: புகைப்படத் தொகுப்பு!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: