முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "90 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசியை வழங்க வேண்டும்" - மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

"90 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசியை வழங்க வேண்டும்" - மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

முதலமிச்சர் மு.க ஸ்டாலின்

முதலமிச்சர் மு.க ஸ்டாலின்

கடந்த செப்டம்பர் மாதம் வழங்கியிருக்க வேண்டிய தடுப்பூசிகள் மத்திய அரசால் இன்னும் வழங்கப்படவில்லை என அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கால்நடைகளை பாதிக்கும் கோமாரி நோயை தடுக்க 90 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய கால்நடை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் வழங்கியிருக்க வேண்டிய தடுப்பூசிகள் மத்திய அரசால் இன்னும் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதையும் படிக்க :  விருப்பமில்லாமல் நடந்த திருமணம் பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடிவிடாது - சென்னை ஹைகோர்ட்

தமிழ்நாட்டில் கால்நடைகள் கோமாரி நோயால் தாக்கப்படுவதைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிக்கவும் தமிழக அரசு கோரியுள்ள 90 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்

First published:

Tags: CM MK Stalin, Measles Symptoms, MK Stalin