ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Lockdown : அதிகரிக்கும் கொரோனா... மீண்டும் கடுமையாகிறதா ஊரடங்கு?

Lockdown : அதிகரிக்கும் கொரோனா... மீண்டும் கடுமையாகிறதா ஊரடங்கு?

ஊரங்கு கட்டுப்பாடுகள்

ஊரங்கு கட்டுப்பாடுகள்

தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோன தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் கடுமையாக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. தொற்றை கண்டறியும் பரிசோதனையை அதிகரித்ததால் தொற்று எண்ணிக்கை கூடுதலாக காணப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்நிலையில், இம்மாதம் 31ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைகிறது.

இதனால், ஊரங்கை மேலும் நீட்டிப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்துகிறார். அவர் தலைமையில் காலை 11 மணியளவில் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்திற்குப் பின்னர், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

Must Read : தளர்வா? கடுமையா? - ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னையில் ஜூலை 1ஆம் தேதி 249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு தினசரி தொற்றார்கள் எண்ணிக்கை ஜூலை 17ஆம் தேதி வரை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. ஜூலை 17ஆம் தேதி 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஜூலை 18ஆம் தேதி 13 பேருக்கு பாதிப்பு அதிகமாகி 150 என தினசரி புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

Read More : அண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா... தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு

இதன்பிறகு மீண்டும் எட்டு நாட்கள் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தத நிலையில், கடந்த 26ஆம் தேதி 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் ஜூலை 27ம் தேதி 17 பேருக்கு கூடுதலாக 139 என பாதிப்பு அதிகரித்து. 28ஆம் தேதி 25பேருக்கு கூடுதலாக என 164 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் மீண்டும் அதிரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CoronaVirus, Covid-19, Lockdown, MK Stalin