இந்தியாவின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றுவார்.
தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது. இதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகளில் படி இந்த ஆண்டும் கொடியேற்றம் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனம் போர் சின்னத்திலிருந்து முன்னும் பின்னும் காவல்துறையின் இரு சக்கர அணிவகுப்புடன் அழைத்துச் செல்லப்படும். கோட்டை கொத்தளத்திற்கு முதல்வர் வந்து அடைந்ததும் தலைமைச் செயலாளர் இறையன்பு பூங்கொத்து கொடுத்து வரவேற்பார். அதனைத் தொடர்ந்து தென் இந்தியப் பகுதிகளின் தலைமைப்படை தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படை அதிகாரி, கிழக்கு கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் கூடுதல் டி.ஜி.பி. போன்றவர்களைத் தலைமைச் செயலாளர் முதல்வருக்கு அறிமுகம் செய்து வைப்பார்.
Also Read : மதுவை விற்று தான் ஆட்சியை நடத்தனுமா? அன்புமணி ராமதாஸ் சாடல்!
இதனையடுத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறை அணிவகுப்பைப் பார்வையிடுவார். இதன் பின்னர் கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் 9 மணிக்குத் தேசியக் கொடியை ஏற்றுவார். அப்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்படும்.
பேண்டு வாத்தியங்கள் முழங்கத் தேசிய கீதம் இசைக்கப்படும். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவார். உரை முடிந்த பின் விருதுகள் வழக்கும் நிகழ்ச்சி தொடங்கும். அதில் முதல்வர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா விருது, முதல் அமைச்சர் நல் ஆளுமை விருது போன்ற விருதுகளை வழங்குவார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியோர், வேலைவாய்ப்பை வழங்கிய நிறுவனங்கள், டாக்டர் ஆகியோருக்கான விருதுகளையும், சமூகப்பணியாளர்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருதுகளையும் வழங்குவார்.
இந்த நிகழ்ச்சி கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவரும் முக கவசம் அணிந்து வருமாறு அறியுறுத்தப்பட்துள்ளது. மேலும் ஜார்ஜ் கோட்டை சுற்றிப் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Independence day, Tamil Nadu