தமிழ்நாடு திருநாள் என்றாலே மனதில் உத்வேகம் பிறக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த தமிழ்நாடு திருநாள் விழாவில் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , “தமிழ்நாடு திருநாளை தள்ளிவைக்க இயலாது என்பதால் காணொளியில் பேச முடிவெடுத்தேன். தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே மனதில் ஆற்றல், மகிழ்ச்சி பெருகுகிறது.
“உலகில் முதலில் பிறந்த குரங்கு - தமிழ்க்குரங்குதான்" என்று நம்மைச் சிலர் அந்தக் காலத்தில் கிண்டல் செய்வார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நாம் எதைச் சொன்னாலும் ஆய்வுப்பூர்வமாகத்தான் சொல்கிறோம். சிலர் போலக் கற்பனையாகச் சொல்லவில்லை. அத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட நமது தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்புக்கு, தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. அதற்காகவும் போராட வேண்டி இருந்தது என்பது அவமானம் அல்லவா? அந்த அவமானம் துடைக்கப்பட்ட நாள்தான், இந்த ஜூலை 18-ஆம் நாள்!.
Also Read: தெலுங்கானாவில் பெருமழை.. பிற நாடுகளின் சதியாக இருக்கலாம் - சந்திரசேகர் ராவ் குற்றச்சாட்டு
அவமானம் துடைக்கப்பட்ட நாள் மட்டுமல்ல, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதன் மூலமாக, தாழ்ந்து கிடந்த தமிழினத்தை, தலைநிமிர வைத்த நாள்தான் இந்த ஜூலை 18-ஆம் நாள்” என்றார். கொரோனா சிகிச்சை முடிந்து இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் தமிழ்நாடு திருநாள் விழாவில் காணொளி காட்சி வாயிலாக கலந்துக்கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, MK Stalin, Tamilnadu, TamilNadu Day