Home » News » Tamil-nadu » TAMIL NADU CHIEF MINISTER EDAPPADI PALANISAMY ANNOUNCED TO FORMED SPECIAL COMMISSION FOR CASTE POPULATION COUNT SKD

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
முதலமைச்சர் பழனிசாமி
  • Share this:
அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் வன்னியர் சமுதாய மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று பா.ம.க சார்பில் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக, பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அவர்களை, சென்னைக்குள் நுழைய விடாமல் காவல்துறையினர் தடுத்த நிலையில், சென்னை பெங்களத்தூரில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ரயில்கள் மீது கல்வீசியும் தாக்குதலில் ஈடுபட்டார்கள். இந்தநிலையில், ‘தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பினை பெற்று தந்து, தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, “சமூக நீதி காத்த வீராங்கனை” என்று அனைவராலும் போற்றப்படுகின்றார்.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது. மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும். சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.


ஜெயலலிதா சமூக நீதி காப்பதில் எந்த அளவிற்கு உறுதியாக இருந்தார் என்பதை நாடறியும். எனவே, ஜெயலலிதா வழியில் செயல்படும், இவ்வரசும் அதே உறுதியில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: December 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading