தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணங்களின் அடிப்படையிலேயே, அதிமுகவுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக, தேர்தல் ஆணையம் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வடிவமைத்துள்ளது.
ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான செயல்முறை விளக்க கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, அதிமுகவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளபோது, அதிமுக பொதுக்குழு செல்லும் என ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு இடைக்கால தடை பிறப்பிக்காதபோதும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என வந்த கடிதத்திற்கு அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்க தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் வாங்க மறுத்து அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள், திருப்பி அனுப்பினர்.
தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையம் வழங்கிய ஆவணங்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருந்ததால், அதை குறிப்பிட்டு, அதிமுகவுக்கு கடிதம் அனுப்பியதாக தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Admk Party, Sathya pratha sahoo