தமிழகத்தில் 4,512 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு: 231 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் பறிமுதல் - தேர்தல் ஆணையர் தகவல்

சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் 4,512 பேரின் வேட்புமனுக்கள் ஏற்க்கப்பட்டுள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு 7,255 வேட்புமனு தாக்கல்செய்தனர். அதில், 4,512 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்க்கப்பட்டுள்ளன. இதுவரையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் 83.99 கோடி ரூபாய், 1.79 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள், 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், 14.8 கோடி ரூபாய் மதிப்புள்ள இதர பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 231.63 கோடி ரூபாய் மதிப்பிலான பணங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் 6.29 கோடி பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள். தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக 1,971 புகார்கள் வந்துள்ளன. அதில் 1,368 புகார்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மீதமுள்ள புகார்கள் உண்மை இல்லை. இதுவரையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு 14,071 மனுக்கள் வந்த நிலையில் 6,598 பிரச்சாரங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

  தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்தல் ஆணையத்தால் தடுப்புக் காவலில் 8,158 கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை மூலமாக 515 சோதனைச் சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 18,712 உரிமம் வாங்கிய துப்பாக்கிகள் மீண்டும் காவல்துறையால் வாங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 80 வயதைக் கடந்தவர்கள் 12.87 லட்சம் பேர் உள்ளனர்.

  அதில், 80 வயதைக் கடந்தவர்களில் 1,49,567 அஞ்சல் வாக்குகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். கொரோனா பாதித்து ஒருவர் கூட அஞ்சல் வாக்குகளுக்கு விண்ணப்பிக்கவில்லை. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக கரூர், கோயம்புத்தூர், சென்னையில் அதிகமான புகார்கள் வந்துள்ளன’ என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: