ரஃபேல் ஊழல் புத்தகம் பறிமுதல் விவகாரம்! தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்

மேலும், புத்தக வெளியீட்டுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் 146 புத்தகங்களையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரஃபேல் ஊழல் புத்தகம் பறிமுதல் விவகாரம்! தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்
சத்ய பிரதா சாஹு (கோப்பு படம்)
  • News18
  • Last Updated: April 2, 2019, 6:22 PM IST
  • Share this:
ரஃபேல் ஊழல் குறித்த புத்தகத்தை பறிமுதல் உத்தரவிடவில்லை என்று தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரசாத் சாஹூ தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் உடனான ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், "நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்" என்ற பெயரிலான புத்தகத்தை இன்று மாலை வெளியிடுவதாக பாரதி புத்தகாலயம் அறிவித்திருந்தது.

நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்இந்த புத்தகத்தை பத்திரிகையாளரும், இந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம் வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, ’நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ புத்தகத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், புத்தக வெளியீட்டுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் 146 புத்தகங்களையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

படிக்க... பறிமுதல் செய்யப்பட்ட புத்தகம்.... இணையத்தில் பரவிய பி.டி.எப்தேர்தல் பறக்கும் படையினரின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. இந்த விவகாரம் குறித்து தெரிவித்த தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ, ‘ரஃபேல் ஊழல் குறித்த புத்தகத்தை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை.

’நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளோம்’ என்று தெரிவித்தார். அதனால், யாருடைய உத்தரவின் பேரில் காவல்துறையினர், அந்தப் புத்தகங்களை பறிமுதல் செய்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading