Home /News /tamil-nadu /

செப். 26-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை... முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு!

செப். 26-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை... முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு!

தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவை

Chennai | தமிழக அமைச்சரவைக்கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 26ம் தேதி காலை நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 26-ம் தேதி நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் தமிழக சட்டப்பேரவை நடைபெறும் நிலையில் தமிழக அமைச்சரவை ஆலோசனை நடத்துகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 26ம் தேதி காலை 9:30 மணியளவில் கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், புதிய தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து, அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளதோடு, பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see... பாஜக மாவட்ட தலைவர் மீது பாய்ந்தது வன்கொடுமை சட்டம்

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, CM MK Stalin, TN Cabinet

அடுத்த செய்தி