Home /News /tamil-nadu /

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது.. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது.. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழக அமைச்சரவை கூட்டம் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் மாநிலத்தின் நலன் சார்ந்த அம்சங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அதுதொடர்பாக அவசர சட்டம் இயற்றுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம்.

    பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னை தொடர்பாக  எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படலாம். வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும், வெள்ளத்தடுப்பு, மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

    Also Read: கழக முன்னோடிகளை பெரியாராக, அண்ணாவாக பார்த்து மகிழ்கிறேன் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    மேலும் ஒன்று முதல் 5ம்வகுப்பு மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: DMK, MK Stalin, Tamil News, Tamilnadu

    அடுத்த செய்தி