இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.. இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு..

Youtube Video

சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

 • Share this:
  தமிழக அரசின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 2ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

  இதில், வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய சட்ட மசோதிக்காள் குறித்தும், தொழில் நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

  மேலும் படிக்க... கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

  மேலும், இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களுக்கு என்னென்ன புதிய திட்டங்கள் அறிவிக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல், சசிகலா விடுதலை போன்ற சூழல்களுக்கு மத்தியில், தமிழக அமைச்சரவை கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



  .உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: