முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது.. பல முக்கிய விவகாரம் குறித்து ஆலோசனை

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது.. பல முக்கிய விவகாரம் குறித்து ஆலோசனை

மாதிரி படம்

மாதிரி படம்

Tamil Nadu Cabinet meeting | ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பிய அனுப்பியது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. அதில் 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது.

சட்டப்பேரவையில் வரும் 20-ம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து, மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதுதவிர, மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளன.

இவைகளுக்கு இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், தனியார் தொழில் திட்டங்களுக்கான ஒப்புதலும் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இவைதவிர, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பிய அனுப்பியது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

First published:

Tags: CM MK Stalin, TN Cabinet