Home /News /tamil-nadu /

4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 13 வாக்குச்சாவடிகளின் மறுவாக்குப்பதிவு நிலவரம்!

4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 13 வாக்குச்சாவடிகளின் மறுவாக்குப்பதிவு நிலவரம்!

வாக்காளர்

வாக்காளர்

இடைத்தேர்தல் மற்றும் மறு வாக்கெடுப்பு தொகுதிகளில் மாலை 3 வரை பதிவான ஓட்டு சதவீதம் எவ்வளவு என்று இங்குப் பார்ப்போம்.

  • News18
  • Last Updated :
    தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

    இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் மாலை 3 வரை பதிவான ஓட்டு சதவீதம் எவ்வளவு என்று இங்குப் பார்ப்போம்.

    இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் சூலூர் தொகுதியில் 58.16 சதவீதமும், அரவக்குரிச்சியில் 66.38 சதவீதமும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 56.25 சதவீதமும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் 52.17 சதவீதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

    மறுவாக்கெடுப்பில் பூந்தமல்லி மாட்டுப்பாளையம் வாக்குச்சாவடியில் 61.96 சதவீதமும், பன்ருட்டி திருவதிகை வாக்குச்சாவடியில் 63 சதவீதமும், காங்கேயம் திருமங்கலம் வாக்குச்சாவடியில் 60.43 சதவீதமும், ஆண்டிபட்டி பாலசமூத்திரம் வாக்குச்சாவடியில் 57.93 சதவீதமும், பெரியகுளம் வடுகப்பட்டி வாக்குச்சாவடியில் 52.95 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    தருமபுரி தொகுதியில் பாப்பிரெட்டிபட்டிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதில் டி.அய்யம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வாக்குச்சாவடியில் 66.85 மற்றும் 80.08 சதவீதமும், நத்தமேட்டில் உள்ள 4 வாக்குச்சாவடியில் 64.99, 76.47, 63.9 மற்றும் 84.47 சதவீதமும், ஜல்லிப்புதூரில் இருக்கும் இரண்டு வாக்குச்சாவடியில் 84.47 சதவீதமும் பதிவாகியுள்ளது.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Aravakurichi By election, Elections 2019, Lok Sabha Election 2019, Ottapidaram By Election, Tamilnadu by election

    அடுத்த செய்தி