சென்னையில் பூ விற்பவர்கள், வீட்டு வேலைக்கு செல்வோர், பிற கூலி வேலைகளுக்கு செல்வோர் என அனைவரும் பிரதனமாக நம்பியிருப்பது மாநகர அரசு பேருந்துகளைதான். அதிலும் அவர்கள் பச்சை, மஞ்சள், வெள்ளை நிற பெயர் பலகை கொண்ட பேருந்துகளை தேர்வு செய்து பயணிப்பர். இந்த பேருந்துகள்தான் பிற பேருந்துகளை காட்டிலும் கட்டணம் குறைவாக இருக்கும். இப்படி ஒரிரு ரூபாய்களை கூட பார்த்து பார்த்து செலவு செய்ய வேண்டியுள்ள ஏழை மக்களை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் கடுமையாக பாதித்துள்ளது.
பேருந்துகள் முழுமையாக இயங்காததால் பலர் வேலைக்குச் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாட செலவுக்கே பணம் இல்லாது தவிக்கும் நிலைக்கு அந்தத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பூ விற்கும் தொழிலாளர்களின் நிலையோ மேலும் மோசம்... அவர்கள் பேருந்தில் அமர்ந்தவாறு பூக்களை கோர்த்துக்கொண்டே செல்வதை காலையில் பேருந்தில் பயணித்த யாரும் பார்க்காமல் இருக்க முடியாது. இவர்கள் அனைவரும் பேருந்து ஓடாததால் பூ வாங்க செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர்.
இவர்கள் மட்டுமல்லாது, நீரிழிவு நோய் உள்ளிட்ட நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்ட முதியோர் வாரம் ஒருமுறை அரசு மருத்துவமனை சென்று மருந்து வாங்கி வருவது வழக்கம். இவர்களெல்லாம் இந்த வாரத்துக்கான மருந்தை வாங்கவோ, மருத்துவமனை செல்லவோ முடியாமல் தவிக்கின்றனர்.
மேலும் படிக்க... இரவோடு இரவாக ஜெயலலிதா பேனரை அகற்றிய அதிமுகவினர்: முன்னுதாரணம் என பொதுமக்கள் பாராட்டு
அன்றாட வருமானத்தை நம்பி வாழ்க்கையை நடத்தும் இவர்களாலேயே சென்னை பாதிக்கு மேல் நிரம்பியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்டவர்களின் நிலையை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Strike, Transport workers