• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • TN Budget 2021 : சிறு, குறு தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் - தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

TN Budget 2021 : சிறு, குறு தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் - தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

சிறு தொழில்

சிறு தொழில்

சிறு, குறு தொழில் முனைவோருக்கு கருணாநிதி முதல்வராக இருந்த போது மின்சாரத்திற்கு மானியம் வழங்கி தொழில்கள் ஊக்குவித்து வளர்த்து விடப்பட்டது.

  • Share this:
    கோவையில் சிறு, குறு தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்தும், மானிய விலையில் மின்சாரம் வழங்குவது தொடர்பான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என்று தொழில் துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான கோவையில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு, குறு தொழிற் கூடங்கள் செயல்படுகின்றன.

    கொரோனா ஊரடங்கால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் நிதி நிலை அறிக்கையில் தங்களை மீட்டெடுக்கும் அறிவிப்புகள் ஏதும் இருக்குமா என எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    குறிப்பாக சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு என தனி கடனுதவி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு மத்திய அரசு அறிவித்த கடனுதவிகள், பல்வேறு காரணங்களால் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். இந்த சூழலில் தாய்கோ வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கி வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் தொழில் பேட்டைகள் செயல்படுவதற்கு போதிய இடவசதி இல்லாததால் அடுக்குமாடி தொழில்பேட்டைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது குறுந்தொழில் முனைவோர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதேபோன்று திமுக ஆட்சியில் சிறு, குறு தொழில் துறையினருக்கு வழங்கப்பட்டு வந்த மானிய விலை மின்சார திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரும் நிறுவனங்களிடம் பணிகளை பெற்று செய்யும் குறுந்தொழிலாளர்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பதாகவும், அதனை 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Read More : மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் - மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமா?

    தொழில் சார்ந்த குறுந்தொழில்களுக்கு தனி வாரியம் அமைப்பது தொடர்பான கோரிக்கையை தமிழக அரசு பரீசிலிக்க வேண்டும் என்றும் சிறு, குறு தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சிறு, குறு தொழில் முனைவோருக்கு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது மின்சாரத்திற்கு மானியம் வழங்கி தொழில்கள் ஊக்குவித்து வளர்த்து விட்டதை போல மீண்டும் மானிய விலையில் தொழில் துறையினருக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழில் முனைவோர் எதிர்பார்த்துள்ளனர்.

    மேலும்திறன் மேம்பாட்டுக்கு அதிகப்படியான செலவீனங்கள் செய்யப்பட வேண்டும் எனவும்,ஜி.எஸ்.டி யில் நிறைய வட்டி போட்டு இருக்கின்றனர் அவற்றை ரத்து செய்ய மாநில அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    Must Read : TN Budget 2021 Live Update - தமிழக பட்ஜெட் லைவ் அப்டேட்

    ஜி.எஸ்.டி நிலுவை தொகையினை மத்திய அரசிடம் பேசி பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் , கொரொனாவால் பாதிக்கப்பட்ட பல சிறு, குறு தொழில் முனைவோருக்கு வங்கி கடன் கிடைக்க வில்லை எனவும் அவர்களுக்கு கடன் கிடைக்க உதங வேண்டும் எனவும் தொழில் முனைவோர் வலியுறுத்தியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், மானிய விலையில் கடந்த திமுக ஆட்சியில் மின்சாரம் வழங்கப்பட்டதை போல தற்போது மீண்டும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் முனைவோர் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: