தமிழக பட்ஜெட்: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.35,668 கோடி ஒதுக்கீடு

மாதிரி படம்

தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு 35,668 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பும் இடம் பெற்றது. அதன்படி 2021 22 ஆம் ஆண்டிற்கு பள்ளிக் கல்வித் துறைக்கு 35,668 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

  கடந்த ஆண்டு 34,181 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 1,487 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் கூடுதல் எண்ணிக்கையில்.

  மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கான இலவச திட்டங்களை செயல்படுத்துவதில் கூடுதல் நிதி பள்ளிக்கல்வித்துறைக்கு தேவைப்படும் என்கிற அடிப்படையில் தற்போது கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: