தமிழக பட்ஜெட் 2021 : விவசாய பணிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்

கோப்புப் படம்

100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

 • Share this:
  விவசாய பணிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்னர்.

  வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு விடிவு காலம் பிறக்கும் வகையிலான அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் . மாதத்திற்கு 6 நாட்கள் மட்டுமே 100 நாள் திட்டத்தின் வேலை கிடைப்பதாக வருத்தம் தெரிவிக்கும் கிராமபுற தொழிலாளர்கள் தங்களை விவசாய பணிகளிலும், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளிலும் ஈடுபடுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  Also Read : தமிழக அரசுக்கு வரும் ஒவ்வொரு ஒரு ரூபாயின் வரவும்... செலவும்...

  100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கான நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 100 நாள் திட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வாரம் ஒரு முறையோ அல்லது மாதாமாதமோ ஊதியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

  Also Read : கொரோனா பரவல் - மக்களுக்கு சென்னை மாநகராட்சி விடுத்துள்ள எச்சரிக்கை

  விவசாயமும், 100 நாள் வேலை திட்டமும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து இயங்கினால்தான் அந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் என்பது மட்டுமின்றி கிராமபுற தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து வேலை கிடைக்கும் என்று விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: