TN Budget 2021 Live Update | பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு

Tamil Nadu Budget 2021 | தமிழக பட்ஜெட் 2021 நேரலை | முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படடது.

  • News18 Tamil
  • | August 13, 2021, 12:58 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    13:7 (IST)

    பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மூன்று மணி நேரமாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்தார். மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

    12:46 (IST)

    பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை மூன்று ரூபாய் அளவிற்கு கூறிய முதல்வர் ஆணையிட்டுள்ளார்

    12:44 (IST)

    ரூ.1000 உதவித்தொகை பெற குடும்பத் தலைவரின் பெயரை மாற்ற தேவையில்லை. இத்திட்டத்திற்கு தகுதிவாய்ந்த குடும்பங்களை கண்டறிய தேவைப்படும் அளவுகோல் மற்றும் வழிமுறைகளை இந்த அரசு வகுத்து வருகிறது. தகுதிவாய்ந்த குடும்பங்கள் கண்டறியப்பட்டு ரூ.1000 உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

    12:38 (IST)

    விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில்  சிறு விளையாட்டு அரங்குகள் நிறுவப்படும்.  தமிழ்நாடு சுற்றுலா துறைக்கு ரூ.187.50 கோடி நிதி ஒதுக்கீடு.

    12:36 (IST)

    மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் புதுப்பிப்பதற்காக தலா 6 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்தி, அச்சமூகத்திற்கு சொந்தமான வக்பு சொத்துக்களை அரசு பாதுகாக்க முடியும்.

    12:24 (IST)

    பழங்குடியினர் துணை திட்டத்திற்கு 1306.02 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டுமொத்த 4142.33 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. 

    12:18 (IST)

    ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முன்னுரிமை அளிக்கப்படும். அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக 48.48 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2536.69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    12:16 (IST)

    போதிய நிதி வசதி இல்லாத 12959 திருக்கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் 130 கோடி ரூபாய் நிலை நிதி ஏற்படுத்தப்படும். திருக்கோவில்களில் நிர்வகிக்க பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    12:11 (IST)

    அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு.

    12:9 (IST)

    ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு இலவச பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் இதற்கு 409 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.