கேரளாவுக்கு கடத்த முயற்சித்த 30.டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி பறிமுதல்...
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்த முயற்சித்த 30.டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் வினோத் மற்றும் உசேன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில், சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவை சேர்ந்த ஷபர் அலி என்பவர் கடத்தி வர சொன்னதாக ஓட்டுநர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதை தொடர்ந்து கடத்தல் வாகனத்தில் வந்த இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.