பூணூல் அறுப்பு போராட்ட அறிவிப்புக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம்
பூணூல் அறுப்பு போராட்ட அறிவிப்புக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம்
பிராமணர்கள் - மாதிரி படம்
Brahmin Association: எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத பிராமணர்களையும் இந்து சமுதாயத்தை சேர்ந்த பூணூல் அணியும் மற்றவர்களையும் குறிவைத்து தாக்குவோம் என்று அரைகூவலாக சொல்லுவதை கண்டிகிறோம்.
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் அறிவித்துள்ள பூணூல் அறுப்பு போராட்டத்தை, தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக மாநில தலைவர் நா. ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் "காஞ்சி சங்கர மடத்தில் இருந்து கோட்சேவின் வாரிசுகள் அணியும் பூணூல் அறுப்பு போராட்டம் தொடர்வோம்" என்று தெரிவித்துள்ளதை வன்மையான கண்டிக்கிறோம்.
தற்போது எழுந்துள்ள பள்ளிகளில் ஹிஜாப் அணிதல் விவகாரம் கர்நாடக மாநிலத்தில் எழுந்ததாகும் தமிழ்நாட்டில் இத்தகைய சூழல் இல்லை. அவ்விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இவ்விவகாரம் பள்ளி, மாணவ மாணவிகள் மற்றும் மாநில அரசு தொடர்புடையதே இன்றி எந்த ஒரு சமூகத்திற்கு தொடர்புடையது அல்ல.
இவ்விவகாரத்திற்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத பிராமணர்களையும் இந்து சமுதாயத்தை சேர்ந்த பூணூல் அணியும் மற்றவர்களையும் குறிவைத்து தாக்குவோம் என்று அரைகூவலாக சொல்லுவதை கண்டிகிறோம்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இரு வேறு பிரிவுகளுக்கு இடையே விரோத உணர்ச்சிகளை தூண்டும் விதத்திலும் அறிக்கைகள் வெளியிடுவோர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் போற்றுதற்குரிய காஞ்சி சங்கராசார்யருக்கும். சங்கர மடத்திற்கும். பூணூல் அணிவோர்களுக்கும் அவர்தம் நிறுவனங்களுக்கும் போதிய பாதிகாப்பு அளிக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.