ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆர்.எஸ்.பாரதியை குண்டர் சட்டத்தில் கைது பண்ணுங்க - தமிழக பாஜக அறிக்கை

ஆர்.எஸ்.பாரதியை குண்டர் சட்டத்தில் கைது பண்ணுங்க - தமிழக பாஜக அறிக்கை

ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

தனக்கு சட்டம் - ஒழுங்கை காக்க வேண்டிய கடமை உள்ளது என்பதை உணர்ந்து உடனடியாக இந்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதை தமிழ்நாடு வேண்டாம் என்கிறது. தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று பேசினார். ஆளுநரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மதநல்லிணக்கம், சமூக நீதி, பெண்ணுரிமை போன்ற வார்த்தைகளையும் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் பெயர்களையும் தவிர்த்தார். இந்த நிலையில் ஆளுநரின் பேச்சை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிகக் கடுமையாக கண்டித்து பேசினார்.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பற்றி தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ''வட சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால் கவர்னர் வீட்டுக்கு போயிருக்க முடியுமா?’ என்கிறார். அதாவது ஆளுநரை கொலை செய்யக் கூட தயங்காது திமுக என்ற பொருள்பட பேசியிருக்கிறார். திமுகவின் அதிகாரத் திமிரை தெளிவாக இது உணர்த்துகிறது.

ஜனநாயக நாட்டில் ரவுடித்தனம் மூலம் ஆட்சி செய்ய தயங்க மாட்டோம் என்று உயர் பொறுப்பில் இவருக்கும் கட்சியின் தலைவர் சொன்னதை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்துக் கொண்டு, கேட்டுக் கொண்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தொடர்ந்து தரக் குறைவாக பேசி வந்த ஆர்.எஸ்.பாரதியை அனைவருக்குமான முதல்வர் என்று மார்தட்டி கொள்ளும் மு.க.ஸ்டாலின், தனக்கு சட்டம் - ஒழுங்கை காக்க வேண்டிய கடமை உள்ளது என்பதை உணர்ந்து உடனடியாக இந்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும். காவல் நிலையத்தில் ரவுடி லிஸ்டில் இடம்பெற வேண்டிய இந்த நபர் ஒரு ஆறு மாதங்களாவது சிறையில் இருந்தால் திருந்துவார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: BJP, DMK, RN Ravi