Home /News /tamil-nadu /

பெரியார் குறித்த சர்ச்சை ட்வீட் - அந்த பயம்... மு.க.ஸ்டாலின் பாணியில் பாஜக பதிலடி!

பெரியார் குறித்த சர்ச்சை ட்வீட் - அந்த பயம்... மு.க.ஸ்டாலின் பாணியில் பாஜக பதிலடி!

நேற்று பெரியாரின் 46-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ட்வீட் கடும் சர்ச்சையானதை அடுத்து நீக்கப்பட்டது.

தமிழக பாஜக பெரியார் பற்றி பதிவிட்டிருந்த சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கியது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை ட்வீட் செய்திருந்தார்.

அதில், ”பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மற்றொரு ட்வீட் தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து, பின்னர் திராணி இன்றி பயந்து நீக்கியவர், பயம் பற்றி அந்த பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? இந்துக்கள் என்றாலே மிரண்டு விடுகிறீர்கள் போலும். அந்த பயம் இருக்கணும்” என்று மு.க.ஸ்டாலினின் ஃபேஸ்புக் பக்கத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்லி பின் நீக்கப்பட்ட பதிவும் இணைத்துள்ளது.



மேலும் படிக்க: லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை

 
Published by:Sheik Hanifah
First published:

Tags: Periyar

அடுத்த செய்தி