ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'பாஜக சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்' - அன்புமணிக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

'பாஜக சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்' - அன்புமணிக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

அன்புமணி - அண்ணமலை

அன்புமணி - அண்ணமலை

பாமக அதிமுக கூட்டணியில் இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாமக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் ட்விட்டரில், “நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

  பாமக அதிமுக கூட்டணியில் இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அதேபோல் பாஜகவும் அதிமுக மற்றும் பமக தங்களது கூட்டணியில் இருப்பதாக தெரிவித்தாலும், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது.

  பாமக தலைவர் அன்புமணி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என இருவரும் அடுத்து நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி தான் ஆட்சியை பிடிக்கப்போகிறது என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Anbumani ramadoss, Annamalai, Bjp state president, PMK