திமுக துணைபொதுச்செயலாளர் கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்தை ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். திமுக துணைபொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளில் பல அரசியல் தலைவர்களும் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் துணை பொது செயலாளராக அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் கனிமொழியின் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக பல இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட செயல்களை செய்து தங்கள் பலத்தை காட்ட கனிமொழியின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.
எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி @KanimozhiDMK அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) January 5, 2023
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில், “எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி https://t.co/ZQhAXlI9c4
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 5, 2023
இதற்கு கனிமொழியும் அண்ணாமலையின் பதிவிற்கு, “உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.