பாஜக வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் திமுக சதி செய்கிறது: தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் குற்றச்சாட்டு
ஏகத்துவ ஜமாத் தலைவர் இப்ராஹிம்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிப் பொறுக்க முடியாமல் முஸ்லிம்களைத் தூண்டி விட்டு திமுக சதி செய்கிறது என்று தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிப் பொறுக்க முடியாமல் முஸ்லிம்களைத் தூண்டி விட்டு திமுக சதி செய்கிறது என்று தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் அவர் இது தொடர்பாக இப்ராஹிம் கூறியதாவது:
பிரதமர் மோடியின் திட்டங்களால் தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடைந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலி பாஜகவுக்கு கணிசமான மக்கள் ஆதரவு இருக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள மதுரை கிழக்குத் தொகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்ட போது, திமுகவினர் முஸ்லிம்களைப் போராடத் தூண்டி விட்டனர். பா.ஜ. பொங்கல் விழா நடந்தது காலை 10.30 மணி. அது பாங்கு நேரமும் அல்ல. குறிப்பிட்ட தெரு வழியாகச் செல்வது அரசியல் சாசனத்துக்கு எதிரானதும் அல்ல.
இந்நிலையில்தான் சில கட்சியினரை திமுக தூண்டி விட்டுள்ளனர். இந்த சூழ்ச்சியை முஸ்லிம்கள் உணர வேண்டும். சட்டமன்ற தேர்தலில் பாஜக-வை ஆதரிக்க பெரும்பாலான முஸ்லிம்கள் தயாராகி விட்டனர். அதை எதிர்க்கட்சியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை