தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

கோப்பு

அண்மையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. 

 • Share this:
  தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இளைய மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்புகள் இதுவரை இல்லாத வகையில், அதிகரித்து காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் திருமண மண்டபங்கள், கல்லூரிகள் தற்காலிக மருத்துவனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

  ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக வடமாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை ரயில் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில்,  சாமானிய மக்களைக் கடந்து அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

  இதைத்தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இளைய மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக எல்.முருகன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, எனது இளைய மகன் இந்திரஜித்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

  எனக்கும், எனது மூத்த மகன் மற்றும் மனைவிக்கும் பரிசோதனை முடிவிவில் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும், நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: