மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் தமிழகம் முதலிடம்!
மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் தமிழகம் முதலிடம்!
சல்பர் டை ஆக்சைடு வாயு - கோப்புப் படம்
காற்றில் கலக்கும் சல்பர் டை ஆக்சைடு வாயுவை சுவாசிப்பதால் மனிதர்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் சார்ந்த நோய்கள் உண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலும் நிலக்கரி, எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் எரிக்கப்படுவதால் அதிகப்படியான சல்பர் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் ஆண்டுதோறும் 751 கிலோ டன் சல்பர் டை ஆக்சைடு வாயு வெளியேற்றப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக ஒடிசாவில் 648 கிலோ டன், குஜராத்தில் 596 கிலோ டன் சல்பர் டை ஆக்சைடு வாயு வெளியேற்றப்படுகிறது.
ஆண்டுக்கு 215 கிலோ டன் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் சென்னை உலகிலேயே 29-வது இடத்தில் உள்ளது. இதில் வட சென்னை அனல்மின் நிலையம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உலகிலேயே ரஷ்யாவின் நோரில்ஸ்க் நகரில் உள்ள உருக்காலை வளாகம் அதிகப்படியான சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுகிறது. வளிமண்டலத்தில் தேங்கும் சல்பர் டை ஆக்சைடு நீராவியுடன் சேர்ந்து அமில மழையை கொடுக்கிறது.
காற்றில் கலக்கும் சல்பர் டை ஆக்சைடு வாயுவை சுவாசிப்பதால் மனிதர்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் சார்ந்த நோய்கள் உண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.