ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு - கடற்கரை செல்ல தமிழக அரசு தடை

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு - கடற்கரை செல்ல தமிழக அரசு தடை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களும் கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களும் கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களும் கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா கட்டுப்ப்பாடுகள் காரணமக, புத்தாண்டையொட்டி டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று தற்போது குறைந்துவரும் நிலையில், அண்டை மாநிலங்களில் பரவிவரும் ஒமைக்ரான் தொற்று பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்க நாடுகளில் உருவாகியதாகக் கூறப்படும் இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போதுவரை பரவியுள்ளது.

இந்தியாவில் கடந்த வாரம் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சில நாட்களில் இந்த எண்ணிக்கை இந்தியா முழுவதும் 38 ஆக உயர்ந்துள்ளது. வட இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட இந்த தொற்று, இரண்டு நாட்களாக தென் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவிவருகிறது. குறிப்பாக, கர்நாடகாவில் 5க்கும் அதிகமான நபர்களுக்கு தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்த தொற்று தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள், மருத்துவர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தொற்று தொடர்பாக எடுக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கூட்டம் கூடுவதை முடிந்த அளவுக்கு அரசு குறைக்க வேண்டும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், புத்தாண்டையொட்டி டிச.31, ஜன.1 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிங்க: தனித்து போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம் - ராமதாஸ்

First published:

Tags: CoronaVirus, Lockdown, New Year