மத்திய அரசின் பழைய வாகன ஒழிப்பு கொள்கைக்கு தமிழகத்தில் நிலவும் ஆதரவும், எதிர்ப்பும்..

காட்சி படம்

நாட்டில் அதிகரித்து வரும் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதை நோக்கமாக கொண்டது இந்த பழைய வாகன ஒழிப்பு கொள்கை.

  • Share this:
மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய பழைய வாகன ஒழிப்பு கொள்கையால் (Vehicle Scrappage Policy) தமிழக ஆட்டோமொபைல் தொழில் துறையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதை நோக்கமாக கொண்டது இந்த Vehicle Scrappage Policy. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பழைய வாகனங்களை ஒழிப்பதன் மூலம் புதிய வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். இதனால் காற்று மாசுபாட்டை குறிப்பிடத்தக்க வகையில் கட்டுப்படுத்த முடியும் என்பதே அரசின் கருத்தாக உள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய கொள்கையின் படி 15 வருடங்கள் நிறைவு செய்த கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் 20 வருடங்களை நிறைவு செய்த தனிநபர் வாகனங்கள் உள்ளிட்டவை ஃபிட்னஸ் டெஸ்ட்டில் தோல்வி அடையும் பட்சத்தில் அவற்றை அதன் பிறகு சாலைகளில் பயன்படுத்த கூடாது. ஆட்டோமொபைல் விநியோகஸ்தர்கள் மத்திய அரசின் இந்த புதிய கொள்கை முடிவை வரவேற்றாலும், பயன்படுத்திய கார்களை (used car industry) விற்று வரும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உற்சகமாக இல்லை.இந்த புதிய கொள்கை தமிழகத்தில் மட்டும் சுமார் 16 லட்சம் வாகனங்களை பாதிக்கும், தவிர தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 3 லட்சம் வாகனங்களை பாதிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொள்கையின் கீழ் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் வாகனங்களை தாங்களே ஒழிக்க முன்வரும் தன்னர்வலர்களுக்கு 25% வரை வரி சலுகைகள் வழங்கப்படும். அதோடு புதிய வாகனம் வாங்கும் போது பதிவு கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும். தங்கள் வாகனங்களை ஸ்கிராப் செய்தவர்களுக்கு வழங்கப்படும் ஸ்கிராப்பிங் சான்றிதழை வைத்து தள்ளுபடியை வழங்குமாறு வாகன உற்பத்தியாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தடுமாறி வரும் ஆட்டோமொபைல் துறைக்கு உதவியாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் விநியோகஸ்தர்கள் கருதுகிறார்கள். ஆனால் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசின் இந்த புதிய கொள்கையில் ஆர்வம் காட்டவில்லை. இது தொடர்பாக இந்த தொழில் ஈடுபட்டுள்ள வில்சன் ஜோஸப் என்பவர் கூறுகையில், பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தாலும் நன்கு பராமரிக்கப்பட்டு நல்ல கண்டிஷனில் இருக்கும் தனியார் கார்கள் இருக்கின்றன. அதே சமயம் பயன்படுத்தப்பட்ட கார்களின் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டிற்கு புதிய கொள்கை என்னவென்று இன்னும் முழுமையாக தெரியவில்லை.அரசின் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் முன் பல அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம், அரசின் இந்த வாகன ஒழிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய சங்க தலைவர் யுவராஜ், பொருட்களை கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் நடுத்தர மற்றும் சிறிய அளவிலான லாரிகளில் கிட்டத்தட்ட 85% வாகனங்கள் பல காலமாக பயன்பாட்டில் உள்ளவை.

Also read :தமிழ்நாட்டு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது 380 வழக்குகள் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்பாட்டிலிருந்து அகற்றினால் ஏற்படும் வாகன பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிக கடுமையாக உயரும்,எண்கள் தொழிலும் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார். எனவே புதிய வாகன ஒழிப்பு கொள்கையை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதற்கு பதில் எங்கள் துறையை பெரிதாக பாதிக்காத வகையில் பல கட்டங்களாக செயல்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார். எங்களது இந்த கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சியுடன் ஒத்துழைத்துப்போம்.

இதற்கிடையே பல வருடங்களாக ஓடி கொண்டிருக்கும் வாகனங்கள் மூலம் அரசு பசுமை வரியாக ஆண்டுக்கு ரூ.10,000 வசூலிப்பதை பரிசீலிக்கலாம் என்று கூறினார். ஆனால் தமிழக்தை சேர்ந்த முக்கிய சுற்றுசூழல் ஆர்வலர்கள் பலர், வாகன ஒழிப்பு கொள்கையை ஒரே கட்டமாக அரசு அமல்படுத்த வேண்டும், சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்க உதவ வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: