Home /News /tamil-nadu /

தமிழக வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு பெண் துபாஷ்... தமிழக அரசு சபாஷ்

தமிழக வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு பெண் துபாஷ்... தமிழக அரசு சபாஷ்

பெண் துபாஷ்

பெண் துபாஷ்

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு உதவியாளராக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

16வது சட்டப்பேரவையின் இரண்டாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் கடந்த 18ம் தேதியும் அதற்கு அடுத்த நாள் 19ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கலும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

சட்டமன்றத்தில் துபாஷ் என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார். சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார்.

1990 ஆம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கு தற்போது 60 வயது எட்டியுள்ளது. வரும் மே மாதம் ராஜலட்சுமி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் இந்த பொறுப்பிற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளது அனைவர் மத்தியிலும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்த நிலையில் முதல்முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முறைகேடு செய்தவர்களுக்கு தள்ளுபடி செய்யச் சொல்கிறீர்களா? நகைக் கடன் விவாதத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

துபாஷ் என்ற பொறுப்பிற்கு தனி சீருடையும் வழங்கப்படும். ஆண்கள் மட்டுமே அணிந்து இருந்த இந்த சீருடையை தற்போது அப்பெண்ணும் பயன்படுத்த தொடங்கி உள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இந்த பொறுப்பு இருந்து வந்தாலும்கூட முதன்முறையாக அதுவும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அப்பணியில் ராஜலட்சுமி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Karthick S
First published:

Tags: TN Assembly

அடுத்த செய்தி