• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • TN Assembly session | மூன்று நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்

TN Assembly session | மூன்று நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மூன்று நாள்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.

    ஆளுநர் உரையில் பல்வேறு விவகாரங்கள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றன. ஆளுநர் உரைக்குப் பிறகு சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க சார்பில் அவை முன்னவர் துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் சார்பில் செல்வப் பெருந்தகை, பா.ம.கவின் குழுத் தலைவர் ஜி.கே.மணி, பா.ஜ.க சார்பில் நயினார் நாகேந்திரன், வி.சி.க சார்பில் சிந்தனைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தளி ராமச்சந்திரன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் எத்தனை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. அலுவல் கூட்டத்தில், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று தினங்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும். ஆளுநர் உரை மீதான எதிர்க்கட்சிகளின் உரைக்கு, பதில் உரையை 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அலுவல் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘அனைத்து கட்சி தலைவர்கள், துணை சபாநாயகர் என அனைவரும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாளை மற்றும் நாளை மறு நாள் நடைபெறும். 24ம் தேதி முதல்வர் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசுவார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நாளை காலை 10-மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் 11 நபர்களுக்கு இரங்கல் குறிப்புகள் மற்றும் 4 முக்கிய நபர்களான நடிகர் விவேக் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். கேள்வி பதில் நேரம், கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்டவை இந்த கூட்டத்தொடரில் இல்லை. சட்ட முன்வடிவு ஒன்று இரண்டு வரலாம்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: