• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிங்காரச் சென்னை 2.0: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

சிங்காரச் சென்னை 2.0: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சென்னை மாநகரத்தை சர்வதேசத் தரப்படுத்துதல், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன.

  • Share this:
    தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

    • தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியில் முன்னுரிமை

    • தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை

    • மாவட்டம் தோறும் பணிபுரியும் மகளிர்களுக்கான தங்கும் விடுதிகள்

    • மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை விரைவாக எட்டுவதற்கு தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைத்தல்

    • திருப்பெரும்புதூர் முதல் ஓசூர் வரை சென்னை - பெங்களூரு மேம்படுத்தப்பட்ட தொழில் பெருவழி

    • குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க நிபுணர் குழு

    • கோயில் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகளின் தணிக்கை செயல்முறைகளை நெறிப்படுத்துதல்

    • பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த ஒரு உயர்மட்ட ஆலோசனைக் குழு மீண்டும் அமைத்தல்

    • சென்னை மாநகரத்தின் கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்த சிங்காரச் சென்னை 2.0 எனும் புதிய திட்டம்

    • புதிய பொலிவுடன் உழவர் சந்தைகள் மாநிலம் முழுவதும் மீண்டும் நிறுவுதல்

    • விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக கிராமப்புற சந்தைகள் உருவாக்குதல்

    • மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுதல்

    • வேளாண்மைக்கென்று தனியாக ஒரு நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் தாக்கல் செய்தல்

    • வெள்ள நீர் அபாயத்தை கட்டுப்படுத்த வல்லுநர்கள் கொண்ட சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மைக் குழு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: