ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

TN Assembly : தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது

TN Assembly : தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது

தமிழக அரசு

தமிழக அரசு

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை சந்தித்தார். அதில், ஆளுநர் உரையுடன் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சரிடம் ஆளுநர் பன்வாரிலால் கேட்டறிந்தார். அந்த சந்திப்பின்போது, முதலமைச்சருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, வரும் 21ஆம் தேதி சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். கலைவாணர் அரங்கத்தில் தனிமனித இடைவெளியுடன் கூட்டத் தொடர் நடைபெறும் என தெரிவித்த சபாநாயகர், அதற்கு முன்பாக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றார்.

Folow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே சட்டமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி முதல் இருநாட்கள் சட்டமன்றம் கூடிய நிலையில் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். சபாநாயராக அப்பாவு பதவியேற்றார்.

இந்நிலையில், வரும் 21ஆம் தேதி காலை 1 0ணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கவுள்ளது. உரைக்கு பின்னர் சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். அப்போது, சட்டமன்ற கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்னென்ன பணிகள் நடைபெறும் என அதில் முடிவு எடுக்கப்படும்.

Must Read : ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்தப்படும். கூட்டத் தொடரில், அனைத்துக் கட்சியினருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும், கேள்வி நேரம் வர வாய்ப்பில்லை எனவும், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்புவது பரிசீலனையில் இருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Governor Banwarilal purohit, MK Stalin, TN Assembly