Home /News /tamil-nadu /

ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்

ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், இந்தமுறை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2022ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இம்முறை புனித ஜார்ஜ் கோட்டையில் கூட்டத் தொடர் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டின் முதல் பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் இந்தமுறை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என தெரிவித்தார்.

    Must Read : 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

    கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் காகித மில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறிய அவர், இதற்காக பேரவையில் தொடுதிரை கணினிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: TN Assembly

    அடுத்த செய்தி