TN Assembly Live : சட்டபேரவை கூட்டத்தொடர் 13ம் தேதி வரை நடைபெறும் - அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு

Latest Tamil News: தமிழக சட்டபேரவை செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | January 09, 2023, 13:42 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    12:47 (IST)

    ஆளுநர் எந்த நோகத்திற்காக இப்படி செய்கிறார் என்பது தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு கருத்து

    12:41 (IST)

    தேசிய கீதம் இசைக்கப்படும் வரை ஆளுநர் இருப்பது தான் மரபு என சபாநாயகர் அப்பாவு பேட்டி

    12:38 (IST)

    ஜனவரி 10ஆம் தேதி மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவேராவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும், 11, 12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை முழுமையாக நடைபெறும் என்றும் 13ஆம் தேதி முதலமைச்சர் பதில் உரை ஆற்றுவார் என தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பேட்டி

    12:25 (IST)

    தேசிய கீதத்திற்கு முன்பே ஆளுநர் வெளியேறியது அவமதிப்பு. அதிமுகவும் தேசிய கீதத்தை புறக்கணித்தது அநாகரிகத்தின் உச்சக்கட்டம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து

    12:21 (IST)

    உரையில் சில பத்திகளை ஆளுநர் தவிர்த்தது ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சரவை தயாரித்து கொடுத்த உரையை ஜனவரி 7ஆம் தேதியே ஆளுநர் ஏற்றுக்கொண்டார் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

    12:19 (IST)

    அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் என சபாநாயகர் அப்பாவு கருத்து

    12:3 (IST)

    சட்டபேரவை கூட்டத்தொடர் வருகின்ற 13ம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு.

    11:47 (IST)

    அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் - முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம் 

    11:44 (IST)

    சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர்

    சட்டப்பேரவை விதிப்படி, பிரிவு 17-ஐ தளர்த்தி அச்சிடப்பட்ட உரையை மட்டும் அவை குறிப்பில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆளுநர் வெளியேறினார். அவையில் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே ஆளுநர் வெளியேறிவிட்டார்.

    11:35 (IST)

    ஆளுநர் உரை முடிந்த பிறகு முதலமைச்சர் பேசி வருகிறார்

    வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் உரை முடிந்ததும் முதலமைச்சர் பேசுகிறார். ஆளுநர் உரை வருத்தமளிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து.