2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 13ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்ட சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் கடந்த 19ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. அதன்பிறகு பேரவைக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.
இ்ந்நிலையில் சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.
Also Read : அரசு கல்லூரிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார். கோடநாடு விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதும் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதாகக் கூறி சட்டப்பேரவையை இரண்டு நாட்கள் புறக்கணித்த அதிமுகவினர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால் சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.