சட்டப்பேரவையில் முதலமைச்சர் தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்த இருக்கும் பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய இந்த பேரவை வலிறுத்துவதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினர் செல்வபெருந்தகை, உளவியல் ரீதியாக தமிழகத்தை தாக்கவேண்டும் என்பதற்க தான் இதுபோன்ற நுழைவு தேர்வு கொண்டுவரப்படுவதாகவும், மாணவர்கள் கல்லூரி வாயிலில் கால் வைக்கமுடியாத நிலையை இந்த நுழைவு தேர்வு உருவாக்கும் என்றார். மேலும், தமிழகம் தான் எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டும் போது, இந்த நுழைவு தேர்வை எதிர்ப்பதிலும் முன்னுதாரணமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக செல்வபெருந்தகை தெரிவித்தார்.
நீட் தேர்வின் மறுவடிவமாக உள்ள க்யூட் நுழைவு தேர்வு வந்தால், பிற மாநிலங்களில் உள்ளவர்களும் கல்லூரிகளில் சேர்வார்கள் என்றும், இதனால் தமிழக மாணவர்கள் பாதிப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்தநிலையில் தான் NEET, CUET OUT என்று முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக ஜி.கே.மணி கூறினார்.
எதிர்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை முதலமைச்சர் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தோடு, இந்த நுழைவு தேர்வால் கிராமப்புறமாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே முளையிலே கிள்ளி எரியவேண்டும் என்றும், இதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
க்யூட் நுழைவுத்தேர்வால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றும், அரசு கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியதோடு, பேரவையில் இருந்தும் வெளிநட்ப்பு செய்தனர்.
நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது யார் ஆட்சியில்? - சட்டசபையில் காரசார விவாதம்
இதற்கு முன்னதாக பேசிய விசிக சிந்தனைசெல்வன், மதிமுக சதன் திருமலைகுமார், சிபிஎம் சின்னதுரை, சிபிஐ தளி ராமசந்திரன், மனிதநேயமக்கள் ஜவாஹிருல்லா,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் ஆகியோரும் முதலமைச்சர் தீர்மானத்தை ஆதரித்து பேசினர்.
இதன் பின்பு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக தவிர அனைத்து கட்சியினருக்கும் தெரிவித்த ஆதரவு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாகவும் இதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும், இந்த தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வு என்றும், 8 கோடி மக்களின் சார்பாக மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட இந்ததீர்மானத்தை ஒருமனதாக நிறவேற்றி தரவேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் பின்னர் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.