பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள்

பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள்

வாக்குப்பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக 3,538 ‘பிரெய்லி’ வாக்களிக்கும் எந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்காக 60 ஆயிரத்து 884 வாக்காளர் பிரெய்லி தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

 • Share this:

  21 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும்.

  இதில் சந்தேகம் இருந்தால் 1950 என்ற எண்ணுக்கு எஸ்டிடி எண்ணுடன் சேர்த்து டயல் செய்து கேட்கலாம். இந்த எண்ணிற்கு அதிக தொலைப்பேச அழைப்பு வருவதால் சற்று காத்திருந்து தகவலை அறியலாம்.

  இந்த முறை வாக்காளர்களுக்காக சில இணையதள வசதியை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கப் பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான இணையதளத்தில் சக்கர நாற்காலி வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை சரிபார்க்கலாம்.

  Must Read : இன்று சட்டமன்ற தேர்தல் : காலை 7 மணி முதல் வாக்களிக்கலாம்...

  ஏற்கனவே உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்திற்கு (elections.tn.gov.in) சென்று pwd என்ற தலைப்பில் கிளிக் செய்து அந்த வசதிகளைப் பெறலாம். ‘queue’ என்ற தலைப்பை கிளிக் செய்தால் வாக்குச்சாவடியில் உள்ள மக்கள் கூட்ட நெரிசல் பற்றி அறிந்து, நாம் வாக்களிக்கச் செல்லும் நேரத்தை கணித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: