வாக்குப்பதிவு தொடங்கியது.... வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்

வாக்குப்பதிவு தொடங்கியது.... வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்

வாக்கு பதிவு

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணி அதற்கான வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

 • Share this:
  தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணி அதற்கான வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

  வாக்குப் பதிவு இன்று இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்கள், 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண்கள். 7,192 பேர் 3ஆம் பாலினத்தவர். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்களுடன் விவிபேட் எந்திரம் (அளித்த வாக்கை உறுதி செய்யும் எந்திரம்) பொருத்தப்பட்டுள்ளது. 1 லட்சத்து 29 ஆயிரத்து 165 வாக்களிக்கும் எந்திரங்களும், 91 ஆயிரத்து 180 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அதே எண்ணிக்கையில் விவிபேட் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

  88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து 17 ஆயிரத்து 521 தேர்தல் பணியாளர்கள் பணியில் உள்ளனர். வாக்குச்சாவடி பாதுகாப்பிற்காக போலீஸ் மற்றும் போலீஸ் அல்லாத படை வீரர்கள் 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் உள்ளனர். அதில் 23 ஆயிரத்து 200 மத்திய ஆயுதப்படை காவலர்கள், தமிழக காவல்துறையினர் 74 ஆயிரத்து 163 பேரும் அடங்குவர்.

  மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் 50 சதவீதம், அதாவது 46 ஆயிரத்து 203 வாக்குச்சாவடிகளில் வெப்-காஸ்டிங் என்ற தொழில்நுட்பம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

  10 ஆயிரத்து 813 பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமுள்ள வாக்குச்சாவடிகள் 537. அங்குள்ள வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு, 8,014 தேர்தல் நுண் பார்வையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

  இன்று மாலை 6 மணிமுதல் 7 மணிவரையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல உடல் வெப்பத்தில் மாறுபாடு ஏற்பட்டு தொற்றுக்கான சந்தேகம் உள்ளவர்களுக்கும் கடைசி ஒரு மணி நேரத்தில் முழு கவச உடையுடன் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: