Dmk Alliance - Election Result : திமுக கூட்டணி முன்னிலை - பின்னடைவை சந்திக்கும் அதிமுக அமைச்சர்கள்
Dmk Alliance - Election Result : திமுக கூட்டணி முன்னிலை - பின்னடைவை சந்திக்கும் அதிமுக அமைச்சர்கள்
வாக்கு இயந்திரம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். அதேவேளையில் அதிமுக அமைச்சர்கள் பலரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என தெரிகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.
இதையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேவேளையில் அதிமுக அமைச்சர்கள் பலரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் முதல்சுற்று வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.