தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரும் சந்தித்து பேசிக் கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரும் சந்தித்து பேசிக் கொண்டனர்.
ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களம் கண்டது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டது. தமிழகம் முழுக்க வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் குறைந்த நாட்களே தான் போட்டியிடும் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் உதயநிதி ஸ்டாலின் 7,635 வாக்குகளைப் பெற்று 5,487 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி 1,788 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்தில் இருந்த உதயநிதி ஸ்டாலினை ஜெயக்குமார் சந்தித்து பேசினார். தேர்தல் களத்தில் கடுமையாக விமர்சித்துக் கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் - உதயநிதி ஸ்டாலின் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசிக் கொண்டதை அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர்.
சென்னையில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.