தேர்தல் பிரசாரத்துக்காக இன்று காலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி... சேலம் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் வாக்கு சேகரிக்கின்றனர்...

தேர்தல் பிரசாரத்துக்காக இன்று காலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி... சேலம் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் வாக்கு சேகரிக்கின்றனர்...

ராகுல் காந்தி

வேளச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரை ஆதரித்து அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார்.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார். சேலத்தில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் இணைந்து வாக்கு சேகரிக்கிறார்.

  இன்று காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் ராகுல், அங்கிருந்து கார் மூலம் வேளச்சேரி செல்கிறார். வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானாவை ஆதரித்து அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். அப்போது, திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கும் ஆதரவு திரட்ட உள்ளார். அதைத்தொடர்ந்து கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு ராகுல் செல்கிறார். அங்கு மதிய உணவை அருந்திவிட்டு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

  பின்னர் சேலம் சீலநாயக்கன்பட்டியில் மாலையில் நடைபெறும் திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் கலந்து கொள்கிறார். அப்போது, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின், ராகுல் ஆகியோர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

  மேலும் படிக்க... தேன்நிலவிற்கு செல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிய அமமுக வேட்பாளர்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Vaijayanthi S
  First published: